கொரோனா வைரஸ் சீனாவை ஆட்டி படைக்கும் நிலையில் மருத்துவக்குழுவினர் பொதுமக்களை வலுகட்டாயமாக இழுத்துச்செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சீனா அரசு 9 நாளில் சிறப்பு மருத்துவமனையை கட்டிமுடித்தது.

கொரோனா வைரஸ் 27 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில் தற்போது வரை அதை கட்டுப்படுத்தும் மருத்து கண்டறியப்படவில்லை.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது பிப்ரவரி 2ம் திகதி அன்று மட்டும் 58 பேர் இறந்த நிலையில், பிப்ரவரி 3ம் திகதி 64 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில், ஜியாங்சு மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை பொலிசார் உதவியுடன் மருத்துவக் குழுவினர் வலுகட்டாயமாக இழுத்துச்சென்ற சமபவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களுக்கு தும்மல் இருந்ததால் கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் மற்றும் நோய் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் மருத்துவர்கள் அவர்களை தனிமைப்படுத்தி வைத்து கண்காணிக்க வலுகட்டயமாக அழைத்துச்சென்றதாக கூறப்படுகிறது.

https://twitter.com/IsChinar/status/1224545243992817664

இதுபோன்று தும்மும் அல்லது இரும்மும் பலரை நோய் தொற்று இருக்கும் என்ற அச்சத்தில் மருத்துவ குழுவினர் வலுகட்டயமாக அழைத்துச்சென்று தனிமைப்படுத்தி வைப்பதாக உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றன.

Sindinga9 shop