சீனாவின் wuhan நகரில் உள்ள மருத்துவமனையின் பெண் ஊழியர்கள் தங்களின் சிறிய மருத்துவமனை முழுவதும் சடலங்களாக அந்த இடமே பிணக்கிடங்கு போல காட்சியளிப்பதாக கூறி அதிரவைத்துள்ளனர்.

கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 560க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் 28000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸின் தாக்கம் wuhan நகரில் தான் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் அங்குள்ள ஒரு சிறிய மருத்துவமனையில் உள்ள நிலவரம் குறித்து அங்கு பணிபுரியும் இரண்டு பெண் ஊழியர்கள் அதிர்ச்சி தரும் விடயங்களை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், சீன அரசு கொரோனா விடயத்தில் பொய் சொல்கிறது. எங்களின் மருத்துவமனை தற்போது பிணக்கிடங்காக மாறிவிட்டது.

எங்கு பார்த்தாலும் சடலங்களாகவே உள்ளது. இறுதிச்சடங்கு நடைபெறும் சுடுகாடுகளில் ஏற்கனவே அதிக சடலங்கள் இருப்பதோடு அந்த இடங்கள் நிரம்பி வழிவதால் அவர்கள் இறப்பவர்களின் சடலங்களை எடுத்து கொள்ள மறுக்கிறார்கள்.

இதனால் மருத்துவமனையில் உள்ள சடலங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சடலங்களை உடனடியாக அப்புறப்படுத்தவில்லை என்றால் வைரஸ் நோய் தொற்று அதன் மூலம் பரவு அபாயம் உள்ளது.

இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கூறியுள்ளனர்.

Sindinga9 shop