ஆரோக்கியாமான உணவுமுறை என்பது உங்கள் ஆரோக்கியத்திற்கும், வாழ்நாள் அதிகரிப்பிற்கும் அவசியமான ஒன்றாகும்.

உங்கள் நல்வாழ்விற்கு அடிப்படை தேவையும் இதுதான்.

ஆனால் சிலசமயம் நீங்கள் ஆரோக்கியமென நினைத்து பின்பற்றும் சில பழக்கவழக்கங்கள்தான் உங்கள் ஆரோக்கியத்தையே சிதைக்ககூடும் என்பதுதான் உண்மை.

நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம் வாழ்வில் அன்றாடம் கலந்திருக்கும் ஒரு உணவுப்பொருள் என்றால் அது பால்தான்.

பால் என்பது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாகும்.

அளவாக சாப்பிட்டால் பால் அனைத்து விதத்திலும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாலினை அதிக நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துவது தவரான விடயமாககும். அது உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

ஆனால், பாலினை நீண்ட நேரம் வைத்து குடிக்கலாம். நீண்ட நேரம் கெட்டுபோகாமல் வைத்து பருக ஆரோக்கியமான வழிமுறை ஒன்று உண்டு.
பாலில் ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதன் மூலம் நீங்கள் பாலை கெட்டுப்போகாமல் தடுக்கலாம். அது மாத்திரம் இன்றி உணவில் எத்தனை பொருட்களை சேர்த்தாலும் அதற்கு முழுமையான சுவையை கொடுப்பது என்னவோ உப்புதான்.
உப்பு சுவைக்காக சேர்க்கப்படுவது மட்டுமல்ல, சில ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் சேர்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஆய்வு ஒன்றில் சோடியம் குறைவாக உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் நாம் உப்பை போதியளவு எல்லா உணவிலும் கலந்து சாப்பிடலாம்.

Sindinga9 shop