அமெரிக்காவில் தாய் போதை மருந்துகளை ஊற்றி உபயோகப்படுத்தும் குழாயில் இருந்த தண்ணீரை குடித்த 5 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Stephanie Alvarado என்ற பெண்ணின் மகள் Sophia Larkson (5)

போதை பழக்கத்துக்கு அடிமையான Stephanie அதன் காரணமாக தனது பணியை இழந்து வீட்டில் இருந்தார். ஆனாலும் அவர் போதை பழக்கத்தில் இருந்து மீளாமல் இருந்து வந்தார்.

அதிலும் போதை மருந்துகளை உள்ளே வைத்து உட்கொள்ளும் குழாயை வீட்டில் Stephanie வைத்திருந்தார்.

இந்நிலையில் Stephanie-ன் மகள் Sophiaவுக்கு இரவில் அதிகளவு தாகம் ஏற்பட்ட நிலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து Stephanie பயன்படுத்தும் குழாயில் போதை மருந்துடன் கலந்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரை குடித்துள்ளார்.

facebook

உடனடியாக சிறுமியின் தொண்டை எரிய தொடங்கிய நிலையில் தண்ணீரை துப்பி வாந்தி எடுத்தாள்.

இதை பார்த்த Stephanie ஆம்புலன்ஸை அழைக்காமல் மகளை காப்பாற்றும் படி கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்.

ஏனெனில் ஏற்கனவே போதை மருந்துகளை பயன்படுத்தியதாக Stephanie மீதும் அவர் கணவர் மீதும் பொலிசில் வழக்கு உள்ளதோடு அதற்காக இருவரும் சிறைக்கு சென்றுள்ளனர்.

இதனால் மீண்டும் சிக்கி கொள்வோமோ என பயந்து ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

பின்னர் சிறுமி Sophia சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்த மருத்துவர்கள் Methamphetamine என்ற போதை மருந்து அவரின் இரத்தத்தில் இருந்ததை உறுதி செய்தனர்.

Garfield County Police

இதை தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் Stephanie-வை அவருடன் சேர்ந்து போதை பழக்கத்துக்கு அடிமையான இரண்டு ஆண்களை கைது செய்தனர்.

விசாரணையில் சுயநினைவை இழந்து கிடந்த சிறுமியை போர்வையால் மூடி அவர் வாயை திறந்து Stephanie பால் ஊற்றியது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் வீட்டிலிருந்து அதிகளவிலான போதை மருந்துகள் மற்றும் அதை பயன்படுத்த உதவும் குழாய்களை பொலிசார் கைப்பற்றினார்கள்.

தொடர்ந்து Stephanieயிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Garfield County Police
Sindinga9 shop