டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சாணக்யா பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் இருக்கும் வளாகத்தில் துப்புறவு பணியாளர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் அந்த துப்புரவு தொழிலாளியின் 5 வயது பெண் குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென கதறி அழுதபடியே வீட்டிற்குள் ஓடி வந்துள்ளார்.

இதனால், பதறியபோன பெற்றோர்கள் குழந்தையிடம் விசாரித்ததில் குழந்தை ஏதும் பதில் சொல்லவில்லை. இதனால் பதறிப்போன தாய் குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறினார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் தாய் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து நடந்த விசாரணையில் தூதரக வளாகத்தில் வசிக்கும் 25 வயது டிரைவர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து டிரைவரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேறகொண்டு வருகின்றனர்.

Sindinga9 shop