ஸ்வீடனை சேர்ந்த பெண்ணுக்கும், தமிழக இளைஞருக்கு நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

தமிழகத்தின் திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சண்முகவேல் – தமிழரசி. இவர்களின் மகனான தரணி, பட்டப்படிப்பை முடித்துவிட்டு சுவீடனில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

அங்கு நண்பர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடச் சென்ற போது மரியா சூசேன் என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.

நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாற திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

இதையடுத்து தனது பெற்றோர்களிடம் கூற இருவருக்கும் பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது.

எனவே, சாணார்பாளையத்தில் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. நாடு கடந்து இணைந்த இந்த தம்பதிக்கு இந்து, கிறிஸ்தவம் மற்றும் சுயமரியாதை முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றன.

அதாவது தாலி கட்டி திருமணம் செய்யாமல் இருவரும் மாலை மற்றும் செயின் மட்டும் மாற்றி கொண்டனர்.

இதில் பாரம்பரிய உடை அணிந்தவாறு இரு வீட்டாரின் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்கள்.

Sindinga9 shop