விஜய் வீட்டில் நேற்று முன் தினம் தொடங்கி வருமான வரித்துறையின் அதிரடி சோதனை சுமார் 23 மணி நேரம் நீடித்ததாக சொல்லப்படுகிறது. நேற்று முடிவடைந்த இந்த சோதனையில் விஜய்யின் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

மேலும் படப்பிடிப்பு தளத்திலிருந்த விஜய்யை வருமான வரித்துறை தங்கள் வாகனத்தில் வைத்து அழைத்து வந்தது குறித்தும், இந்த சோதனையில் பின்னணியில் அரசியல் பின் புலன் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.

இதில் அவர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அவரை நோக்கிய தனிப்பட்ட சோதனை அல்ல. இது Consequential Ride.

வேறொரு இடத்தில் சோதனைக்காக சென்ற போது கிடைத்த தகவல் அல்லது ஆவணங்களை வைத்து நடத்தப்பட்ட சோதனை.

மேலும் அவரை அரசு வாகனத்தில் அழைத்து வந்தது என்பது உலகம் முழுக்க இருக்கிற மரபு தான். இது அவருக்கு பாதுகாப்பும் கூட. உண்மைகள் திரிந்து போகவில்லை வாய்ப்பில்லை.

இந்த சோதனையில் அரசியல் பின்புலன் இல்லை. ஒரிஜினில் ரைடு விஜய் அவர்களுடையது அல்ல என கூறியுள்ளது.

Sindinga9 shop