முடங்குகிறது டில்லி : முதல்வர் கெஜ்ரிவால்JanataCurfew, Covid_19india, COVID19outbreak, CoronaUpdatesInIndia, CoronaVirus, LockDown, கொரோனா, வைரஸ், முடக்க முடிவு, 75 மாவட்டங்கள், கோவிட்19,

நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி சுய ஊரடங்கை நடத்தும் படி மக்களை கேட்டுக்கொண்டார். இதனையடுத்துஎதிர்கட்சி ஆளும் பல்வேறு மாநிலங்களிலும் சுய ஊரடங்கை வெற்றிகரமாக நடத்தி முடித்தன.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31ம் தேதி வரை டில்லி முடக்கப் படும் என டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறிய தாவது:நாளை (23 ம் தேதி) காலை 6 மணி முதல் வரும் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இக்கால கட்டங்களில் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு விமானங்கள் டில்லிக்கு வருவது31ம் தேதி வரையில் தடை செய்யப்பட்டுள்ளது.அத்தியாவசிய பணிகளுக்கான போக்குவரத்தை தவிர தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் , இ-ரிக்ஷாக்கள் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.

அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை விடப்பட வேண்டும். விடுமுறை நாட்களில் அவர்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

Sindinga9 shop